பாலாவி உங்களை வரவேற்கிறது !
உங்களை எங்கள் பாலாவியின் இணையத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். காலத்தின் கோலத்தில் சிதறுண்ட நாம் அதே காலத்தின் வேகத்தில் வளர்ந்த இலத்திரணியல் ஊடாக மீண்டும் ஒரு வகையான சமூக கட்டமைப்பில் இணைந்து கொள்ளும் ஒரு முயற்சியே இப் பாலாவி இணையம்..
நமது பாரம்பரியம், வரலாறு , பெருமைகளை எப்படி புலம் பெயர்வுக்கு பின்னரான மாறுபட்ட சூழலிலும் பேணி காப்பது? அத்துடன் சமகாலத்தில் எதிர் நோக்கும் சவால்கள் அவற்றை எப்படி எதிர் கொள்வது ? இருக்க கூடிய நல்ல வளங்களை எப்படி தனிப்பட்ட, சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்துவது? என்பவற்றுடன் தங்களது பூர்வீகத்தை மறவாத அதனுடன் நெருங்கிய உறவை பேணக்கூடிய எதிர்கால சந்ததியை எப்படி உருவாக்குவது? போன்ற பல கேள்விகள் நமக்கு முன் தோன்றிய போது கிடைத்த அரிய விடைதான் பாலாவி
பாலாவியின் நோக்கங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை அவற்றில் முக்கியமானது இங்கு இங்கிலாந்தில் இருக்கக் கூடிய நம்மவர்களுக்குள் ஒரு உறவுப்பாலமாக செயற்படுவது. அடுத்தது நமது வருங்கால தலைமுறைகளும் தங்களது பூர்வீகத்தை அறிந்து வைத்திருப்பதுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்க கூடிய சந்தர்ப்பத்தையும் உருவாக்குவதும் ஆகும்.
இவற்றுடன் பண்பாடு, கலை, கலாச்சாரம் என்பன செறிந்த நம் தாய் மண்ணின் இயல்பான நலன்களை பெறுவதும் இங்கு மேற்கத்தியத்தில் கிடைக்க கூடிய தொழில் நுட்பம் மற்றும் வளங்களை தாய் மண்ணின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதன் மூலமும் ஒரு பரஸ்பர முன்னேற்றத்தை காண்பதும் ஆகும்.
இப்படியாக பல நோக்கங்களைக் கொண்ட முயற்சி ஒரு நீண்ட தொடர் பயணம். அந்தப் பயணத்தில் மேடு பள்ளங்கள் வரலாம், தடைகள் வரலாம், தடுமாற்றங்கள் வரலாம் அவை அணைத்தையும் தகர்த்தெறிந்து ; ஏன் அவற்றையே நமது அடுத்த கட்டத்துக்கான உந்து சக்தியாக்கி முன்னெடுத்து செல்ல நீங்கள் அணைவரும் பாலாவியுடன் என்றும் இணைந்திருங்கள்.-நன்றி.