பொலிகண்டி மேற்கு இருப்பைமூலை சித்திவிநாயகர் ஆலய புனருத்தாரணம்

அன்பான இருப்பைமூலை சித்தி விநாயகர் பெருமான் அடியார்களே!

எங்களது விநாயகப் பெருமானது ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் வெகுவிரைவில் ஆரம்பமாக இருப்பதனால் ஆலய நிர்வாகத்தினரும் திருப்பணி சபையினரும் அதற்கான நிதியுதவியை எங்களிடமிருந்து கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்த திருப்பணியில் பங்கு பெற விரும்பும் அடியார்கள் உங்களது பங்களிப்பினை ஆலய திருப்பணிச் சபையினர் உடன் தொடர்பு கொண்டு அல்லது ஆலயத் திருப்பணிச் சபையின்வங்கி கணக்கு -> இருப்பைமூலை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி சபை , கணக்கு இலக்கம்-8005295087, கொமர்சியல் வங்கி, நெல்லியடி கிளைக்கு, அனுப்பி வைத்து எங்களுடைய விநாயகப்பெருமானின் அருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களது கவனத்திற்காக ஆலய திருப்பணி சபையினர் அனுப்பிய கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு ஆலய திருப்பணி சபையினருடன் தொடர்புகொள்ளவும்.நன்றி.

Photo1