12வது அகவையில் பாலாவியின் பணிகளும் , முன்மாதிரியும் . .

கடந்த 12 வருடங்களாக எமது மக்களுக்கு அயராது பணியாற்றி வரும் பாலாவி தனது வித்தியாதாரம் கல்வி வளர்ச்சித் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு ஒன்பதாவது ஆண்டில் எடுத்துச் செல்வதையிட்டு மிகவும் பெருமை அடைகிறது நேரடியாக தான் சேவை செய்வது மட்டுமல்ல, மறைமுகமாக மற்றவர்களுக்கும ஒரு முன்மாதிரியையும் வழிகாட்டலையும் வழங்கி வருகின்றது என்பதில் மிகவும் பெருமை அடைகிறது .

இவ்வாறான நிலையில் பாலாவியின் சாயலையும் , முன்னெடுப்பையும் ஒத்த வகையில் பல அமைப்புகள் உருவாகலாம், அவை சிலவேளை பாலாவியின் தொடர் அமைப்புகள் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்படுத்தலாம்

எமது மக்களுக்கு சேவை செய்து வருகின்ற இவ்வேளையில் மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பாலாவியின் சாயலையும் முன்னெடுப்பையும் ஒத்த வகையில் இயங்கி வரும் எந்த அமைப்புக்கும் பாலாவிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதனை இங்கு நாங்கள் மிகவும் திட்டவட்டமாக எமது மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் பாலாவியின் ஆரம்ப காலம் தொட்டு நடைபெற்று வருகின்றன, அத்தகைய அமைப்புகளை இனம் கண்டு தெளிவுடன் செயல்பட்ட நீங்கள், அதே விதமாக தொடர்ந்தும் தெளிவுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

பாலாவி தனது செயல் திட்டங்களையும் நடவடிக்கையும் எங்கள் மக்களுக்கு உரிய காலங்களில் உரிய முறையில் தெளிவாக அறியத் தந்து தொடரும் என்பதனை உறுதியளிக்கிறோம்.

இந்த விடயங்கள் தொடர்பாக அல்லது வேறு கருத்துக்கள் ஏதும் இருப்பின் palaviuk@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். அவை வரவேற்கப்படுகின்றன. நன்றி.

"மீண்டும் வருவோம் ஒன்றாய் நிற்போம்"