வித்தியாதாரம்
இது பாலாவியினால் முன்னெடுக்கப்படுகின்ற கல்வி மேம்பாட்டுத் திட்டம். கல்விக்கு ஆதாரம் அல்லது - கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு என்ற கருத்தின் அடிப்படையில் " வித்தியா -ஆதாரம் " என்பன இணைந்து “வித்தியாதாரம்” என்றாகிறது .
இதன் கீழ் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களது கல்வி தேவைகளுக்கு உதவியாக மாதாந்த நிதி உதவி வழங்கப்படும் .
பாலாவியின் அங்கத்துவ வரையறைக்குட்பட்ட பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள, பொருளாதார காரணங்களால் கல்வியில் பிரதிகூலங்களை ஏதிர் நோக்கும் , மாணவர்கள் மட்டும் பெற தகுதி பெறுவார்கள் .
முதலாம் கட்ட கொடுப்பனவுகள் தை மாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரை 12 மாதங்களும் , பாடசாலை விடுமுறை உட்பட, வழங்கப்படும். புதிய மாணவர்கள் தை மாதத்திலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.
இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் பங்குனி மாதம் தொடக்கம் மாசி மாதம் வரை 12 மாதங்களும் , பாடசாலை விடுமுறை உட்பட, வழங்கப்படும். புதிய மாணவர்கள் பங்குனி மாதத்திலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.
5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகளை வழங்கவும் அவர்களை கௌரவிக்கவும் , தீர்மானித்து 2016ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது..
இது பாலாவியின் வித்தியாதாரம் திட்டத்தின் அடுத்த கல்வி வளர்ச்சிப்பணி. இதுவும் பாலாவி லண்டன் அமைப்பின் செயற்பாட்டுகுட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். ஆனால் அவர்களது பொருளாதார பின்னனி எதுவாயினும் மேற்படி கல்வி தகைமைகளை பெறும்போது வழங்கப்படும்.
வித்தியாதாரம் சிறப்பான முறையில் ஆரம்பித்து, உரிய நேரத்தில் நடைமுறைபடுத்த சகல வழிகளிலும் , ஆதரவாக இருந்த , இருக்கின்ற அனைவருக்கும் பாலாவியின் நன்றிகள். அனைவரது பெயர்களையும் தனித்தனியே குறிப்பிடமுடியவில்லை. ஆனால் அனைவருமே பாராட்ட வேண்டியவர்கள் தான். அவர்களுக்கு எங்களது பாராட்டுகள்.