கந்தவனகானம் - லண்டனில் வெளியீடு ......
சிவசம்பு புலவரும், சைவ பெரியார் சிவபாதசுந்தரனாரும் சைவமும் தமிழும் வளர்த்த , வளம் கொழிக்கும் பொலிகை மண்ணில் தோன்றி , இன்று சைவமும் தமிழும் வளர்த்துவருபவர் சைவ புலவர் பொன்.சுகந்தன் அவர்கள்.
தான் பிறந்த பொலிகை மண்ணில் அமர்ந்து அருள்பாலிக்கும் இழுப்பைமூலை ஸ்ரீ சித்திவினாயகப்பெருமான், கந்தவனக்கடவை கல்யாண வேலர், மருதாம்புலம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள், உள்ளிட்ட அணைத்து தெய்வங்களின் மீதும் அளவுகடந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர் புலவர் அவர்கள்.
அந்த அளவுகடந்த பக்தியினாலும், ஈடுபாட்டினாலும் கந்தவனக்கடவை கல்யாண சுவாமி புகழை "கந்தவனகானம்" என்ற பெயரில் பாடல்கள் ஆக்கினார்.
அப்பாடல்களுக்கு தெனிந்திய முன்னனி இசையமைப்பாளர் இசை வடிவம் வழங்க , முன்னனி பாடகர்களினது பக்தி பரவசமூட்டும் இனிய குரலில் இசை வடிவம் வழங்குவித்து "கந்தவனகானங்கள்" என்ற இறுவட்டாக்கினார். இவ் இறுவட்டை 2012ம் ஆண்டு ஆனி மாதம் கல்யாண வேலவரின் தீர்த்த திருவிழா அன்று, ஊறணி தீர்த்த கடற்கரையில் தீர்த்தமாடி ஆனந்தமாய் வீற்றிருந்த ஸ்ரீ வள்ளி , ஸ்ரீ தெய்வயானை சமேத கல்யாண வேலவரின் முன்னிலையில் வெளியிட்டு வைத்தார்.
அந்த இறுவட்டின் லண்டன் வெளியீடு 18ம் திகதி ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாலாவியின் ஒன்ருகூடல்-2012 ல் முதல் நிகழ்வாக வெளியிடப்பட்டது. வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட நிதி முழுவதும் அவரது சமுக நல பணிகளுக்கு அவரிடம் வழங்கப்பட்டது.
புலவரின் பணி மென்மேலும் வளரவும், சிறப்புறவும் பாலாவியும் வாழ்த்துகிறது.