புத்தகங்கள் வழங்கும் பணியில் பாலாவி .......
பொலிகண்டி அம்பிகை சனசமூக நிலையத்தில் 2014ம் ஆண்டு ஆரம்பித்த நூலகப்பிரிவிற்கு நிதி உதவி கேட்டு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தனர்.
இக் கடிதம் 15-02-2014 அன்று நடைபெற்ற விசேடகூட்டத்தில் ஆராயப்பட்டது.
அதன் படி பாலாவி அங்கத்தவர்களிடம் அம்பிகை நூலகத்துக்குரிய புத்தக கொள்வனவு நிதிக்கு என காசு சேர்க்கப்பட்டது.ரூபா 100000.00 சேர்க்கப்பட்டது.
அதிலிருந்து 1ம் கட்டமாக ரூபா 80,000 பெறுமதியான 227 புத்தகங்களும், 2ம் கட்டமாக ரூபா 20,000 பெறுமதியான 77 புத்தகங்களும் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.
நூல்கள் வாங்க நிதியுதவி செய்த அனைத்து பாலாவி அங்கத்தவர்களுக்கும், இலங்கையில் இந்த புத்தகங்களை மொத்த விலையில் கொள்வனவு செய்து உதவிய நலன் விரும்பிக்கும், மற்றும் சகல வழிகளிலும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாலாவியின் நன்றிகள்.