வித்தியாதாரம் 2015
பாலாவியின் வித்தியாதாரத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.அணைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டியவைதான்.
எப்படியான முறையில் பரிசீலிப்பது என தீர்மானிக்கும் முன்னர் எங்களால் என்ன /எத்தனை பேருக்கு வழங்க முடியும் என திட்டவட்டமாக அறியவேண்டியுள்ளது.
ஒரு "வித்தியாதாரம்" அன்பளிப்பு ஒரு மாதத்துக்கு £10.00. மேலதிகமாக செய்யக் கூடியவங்கள் £10.00 இன் மடங்குகளாக 2,3,4, 5 என வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
இந்த £10.00 என்பது இயன்றளவு அதிக பட்ச அங்கத்தவர்கள் வழங்குனர்களாக உள்வாங்கிக் கொள்ளவே தீர்மானிக்கப்பட்டது. இயன்றளவு முயற்சித்து வழங்குனராக சேரவும்.
இந்த செயற்திட்டத்தின் தன்மை காரணமாக பாலாவி எவருடனும் தொலைபேசி மூலம் தொடர்புகளை மேற் கொள்ளமாட்டாது. 2 அல்லது 3 மின்னஞ்சல்கள் மட்டும் ஞாபகப்படுத்த அனுப்பப்படும். நீங்கள் விரும்பினால் உங்களது நண்பர்களுடன், சக வழங்குனர்களுடன் தொடர்பு கொள்ள தடையேதும் இல்லை.
இது தொடர்பான மேலதிக விளக்கங்கள் ஏதும் தேவை என்றால் வழக்கம் போல palaviuk@gmail.com என்ற முகவரியில் நீங்கள் எங்களை தொடர்புகொள்ள முடியும்.
வழங்குனர்களாக பங்களிக்க விரும்பும் அங்கத்தவர்கள் விரைவாக விபரங்களை பதியவும்.