ஆர்ப்பரிக்கும் அலை கடலின் ஓரம் அமைந்து, தலை முறை தலை முறையாக எங்கள் பாலாவியினரால் அந்திமகால சடங்குகளுக்கும், ஆத்ம ஈடேற்ற கிரியைகளுக்கும் பயன்படுத்தப்படுவது எங்கள் ஊறணி இந்து மயானம்.
இந்த மயானம் நாட்டில் ஏற்பட்ட போர் சூழலினாலும், கடலைரிப்பின் காரணமாகவும் , வேறு பல காரணங்களினாலும் சரியாக பராமரிக்கப்படாமல் கடல் கொள்ளும் அளவுக்கு வந்திருந்தது. இதனை அழிவில் இருந்து பாதுகாத்து, உரிமையுடன் பாவிக்க என இதனை பரம்பரை பரம்பரையாக பாவித்து வரும் பொலிகண்டி, கொற்றையூர், வல்வெட்டி மக்கள் இணைந்து “ ஊறணி இந்து மயான குழு ” என்ற அமைப்பை உருவாக்கினார்கள் . .
இந்த குழு மயானத்தை புனரமைத்து , அங்கு ஒரு அந்திம கிரியை மண்டபம் நிர்மாணிக்க முடிவு செய்தனர். அதற்காக மூன்று ஊர்களிலும் நிதி சேர்த்ததுடன், வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள், நலன் விரும்பிகளிடமும் நிதி சேர்க தொடர்புகள் கொண்டனர், அந்த வகையில் எங்களது அமைப்பும் அவர்களது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. .
இது சம்பந்தமாக பாலாவி அதன் அங்கத்தவர்களிடம் தொடர்பு கொண்டபோது, அங்கத்தவர் எல்லாரும் தாரளமாக நன்கொடை வழங்கினார்கள். இப்படியாக மொத்தம் ரூபா 396,193.20 சேகரிக்கப்பட்டு மேற்படி கட்டிட நிதிக்கு அனுப்பபட்டது. .
2013ம் ஆண்டின் இறுதியில் கட்டிட வேலைகள் யாவும் நிறைவு பெற்று, பொலிகண்டி, கொற்றையூர், வல்வெட்டி மக்களால் பாவிக்கப்பட்டு வருகிறது. .
இந்த பணியில் நன்கொடை வழங்கிய, சகல வழிகளிலும் ஒத்தாசை வழங்கிய அங்கத்தவர்கள் அணைவருக்கும் பாலாவி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது