அன்பான உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்.

இங்கு இருக்கக் கூடிய 50-60 அங்கத்தவர்களுக்கு மத்தியில் இந்த பாலாவி அமைப்பை மிகவும் சிறப்பான ஜனநாயக முறையில் நடத்தி செல்ல விரும்புகிறோம். அதே நேரம் உங்களுக்கு தேவையில்லாத நேர விரயங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இயன்றளவு இலகுவான முறையில் உங்களது கருத்துகளையும் - தெரிவுகளையும் நாடி நிற்கிறோம். .

இப்படியான 50-60 அங்கத்தவர்களுக்குள் ஒரே கருத்து இருக்க முடியாது. அதே போல எல்லாருக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் விரும்பியவாறு முடிவுகள் அமையவும் முடியாது.

மாற்று கருத்துகள் இருப்பதும் அதனையும் உள்வாங்கிக் கொள்வதும் தான் சரியான ஜனநாயகமாக இருக்க முடியும்.

சாதகமான பதில்கள் முன்னெடுத்து செல்ல உரிய உந்து சக்தியை தரும் என்றால் மாற்று கருத்துள் செல்ல வேண்டிய பாதைக்கு சிறப்பான வழிகாட்டலை தரும். இரண்டுமே முக்கியமானவை தான்.

மற்றய பங்களிப்புகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உங்கள் கருத்துகளும் - முக்கியமானவை எனவே உங்கள் கருத்து எப்படியான கருத்து என்று கவலைப்படாமல் கருத்துகளையும் தெரிவுகளையும் பதிவு செய்யவும்.

கருத்துக்கள் - தெரிவுகள் - உதவிகள் - பங்களிப்புகள் தேவைப்படும் போது சாதகமான முடிவுகள் உள்ளவர்கள் மட்டும் தான் அதனை தெரிவிக்க வேண்டும் என எண்ணாமல் எதிரான கருத்துள்ளவர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

எனவே தயவு செய்து உங்களிடம் கருத்துகள் தெரிவுகளை கேட்கும் போது ஏதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறோம்.உங்களது கருத்துகளை பதிவுகளாக்கிக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக இயன்றளவு சேர்த்து செயற்பட .

பல சந்தர்ப்பங்களில் நேரப் பற்றாக்குறை காரணமாகவும். சில சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் - தெரிவுகளின் தன்மை காரணமாகவும் தனித்தனியோ - அல்லது மீண்டும் மீண்டுமே கேட்க முடியாத ஒரு இக்கட்டான நிலைமையில் உள்ளோம். எனவே நீங்களாக முன்வந்து உங்கள் கருத்துகளையும் தெரிவுகளையும் பதிவு செய்யவும்.

நன்றி.