சாதனையாளர் பாராட்டி கௌரவிப்பு

கல்வி வளர்ச்சிப் பணியில் இன்னும் ஒரு கட்டமாக பாலாவி தன்னுடைய செயற்பாட்டு பகுதிக்குட்ட , 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களையும், பல்கலைக்கழகம் செல்ல தெரிவு செய்யப்படும் மாணவர்களையும் பாராட்டி, இளம் சாதனையாளர் / சாதனையாளர் விருது வழங்கி, கௌரவித்து , பணப் பரிசுகளையும் வழங்கி வருகிறது.

2015ஆம் ஆண்டு முதல் இப்படியாக பாராட்டி கௌரவிக்கப்பட்ட நம் மாணவச் செல்வங்களுடைய விபரங்களையும், அத்துடன் அடுத்து வரும்ஆண்டுகளில் பாராட்டி கௌரவிக்கப்பட இதுவரை கிடைத்த மாணவர்களின் விவரங்களையும் இங்கே பார்வையிடலாம்.( கிடைத்த விபரங்கள் மட்டுமே - இறுதி முடிவில் மாற்றங்கள் இருக்கலாம்) .

பாலாவியின் செயற்பாட்டு பகுதிக்குட்பட்ட மாணவர்கள் மட்டும் மேற்குறிப்பிடப்பட்ட தகுதிகளை பெறும்போது , அவர்களுடைய பொருளாதார பின்னணி எவ்வாறாக இருப்பினும், பாலாவியின் விதிகளுக்கு அமைவாக பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள்.

இப்படியாக தகுதி பெறும் மாணவர்களை பாலாவி நேரடியாகவே தொடர்பு கொள்ளும். தகுதி இருந்தும் பாலாவினால் தொடர்பு கொள்ளப்படாத மாணவர்கள் இருந்தால் தயவுசெய்து பாலாவியுடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

இது லண்டனில் இருந்து நேரடியாகவே ஒழுங்கு செய்யப்பட்டு ஊரில் இருக்கக்கூடிய சமூக அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் ஒரு முன்னெடுப்பு, பல சந்தர்ப்பங்களில் தகுதியான மாணவர்களின் விபரங்கள் எங்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. எனவே பெற்றோர், தகுதியான மாணவர்கள், நலன்விரும்பிகள், மற்றும் பயனாளர்கள் வழங்குனர்கள், அனைவரும் இந்த விபரங்களை எங்களுக்கு தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வித்தியாதாரம் மின்னஞ்சல் :
vithiyaathaaram@palaviuk.com