சாதனையாளர் பாராட்டி கௌரவிப்பு - 2019

2018ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், கா.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்குமான பாராட்டி கௌரவிப்பு-2019, இலுப்பைமூலை சித்திவிநாயகர் ஆலயத்தில் 16-09-2019 ல் நடைபெற்ற பூங்காவன திருவிழாவில் , இலுப்பைமூலை சித்திவிநாயகர் ஆலய பூங்காவன திருவிழா சபையினருடன் இணைந்து நடத்தப்பட்டது.

அந்த நிகழ்வில் 2018ம் ஆண்டுக்குரிய 8 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அன்றைய நிகழ்வில் இழுப்பைமூலை சித்திவிநாயகர் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ.சி.செந்தூரசர்மா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான ஞாபகார்த்த சின்னத்தையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் விபரம்

       இளம் சாதனையாளர் ஆனந்தகிரி ஜதுசனா
       இளம் சாதனையாளர் சுருதி இராகவன்
       சாதனையாளர் சிவபாலன் கலைமதி
       சாதனையாளர் யோகராசா துவாரகா
       சாதனையாளர் ஞானேஸ்வரன் விநோவதனி
       சாதனையாளர் ஞானேஸ்வரன் புவனலோஜினி
       சாதனையாளர் புவிராஜன் சாருஜன்
      சாதனையாளர் மனோரஞ்சன் அனுசியா

"இவர்கள் அனைவருக்கும் , பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் , பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் !"

அந்த நிகழ்வின் பதிவிலிருந்து சில படங்களை கீழே காணலாம்.



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1

இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த இழுப்பைமூலை சித்திவிநாயகர் தேவஸ்தான பூங்காவன திருவிழா சபையினருக்கும் , நடத்த அனுமதியளித்த இழுப்பைமூலை சித்திவிநாயகர் தேவஸ்தான நிர்வாகத்தினருக்கும், அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ.சி.செந்தூரசர்மா அவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் சிறப்புற உழைத்த அன்புள்ளங்களுக்கும் பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் அன்பான நன்றிகள்

"மீண்டும் வருவோம் ஒன்றாய் நிற்போம்"