சாதனையாளர் பாராட்டி கௌரவிப்பு - 2017

2016ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், கா.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்குமான பாராட்டி கௌரவிப்பு -2017, 07-05-2017 அம்பிகை சனசமுக நிலையத்தினருடன் இணைந்துஅம்பிகை முன்பள்ளி விளையாட்டு விழாவின் இறுதியில் நடத்தப்பட்டது.

அந்த நிகழ்வில் 2016ம் ஆண்டுக்குரிய 7 மாணவர்களும் 2015ம் ஆண்டில் தவறவிடப்பட்டஒரு மாணவருமாக மொத்தம் 8 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அன்றைய நிகழ்வில் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதமகுரு குமரகுருமணி .ச .வைத்தியநாத குருக்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு , மாணவர்களுக்கான ஞாபகார்த்த சின்னத்தையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

அன்றைய நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் விபரம்

       இளம் சாதனையாளர் கிருபாகரன் ஜனனி
       இளம் சாதனையாளர் திருக்குமார் திருலோஷன்
       இளம் சாதனையாளர் அரவிந்தன் வேணுகன்
      இளம் சாதனையாளர் ஆனந்தகிரி கனிசன்
       இளம் சாதனையாளர் ஜதீஸ்வரன் ஜதுஷினி
       சாதனையாளர் சுப்பிரமணியசர்மா துளசி
       சாதனையாளர் இரத்தினசிங்கம் பாமதி
      சாதனையாளர் ஜெயராஜசிங்கம் சுதாகர்

"இவர்கள் அனைவருக்கும் , பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் , பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் !"

அந்த நிகழ்வின் பதிவிலிருந்து சில படங்களை கீழே காணலாம்.



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1





இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த அம்பிகை சனசமுக நிலைய நிர்வாகத்தினர், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அனைத்து வழிகளிலும் சிறப்புற உழைத்த அன்புள்ளங்களுக்கும் பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் அன்பான நன்றிகள்.

"மீண்டும் வருவோம் ஒன்றாய் நிற்போம்"