சாதனையாளர் பாராட்டி கௌரவிப்பு - 2016

வித்தியாதாரம் கல்வி மேம்பாட்டு பணியின் ஒரு கட்டமான "வித்தியாதாரம் பாரட்டி கௌரவிப்பு" முதல் முறையாக இலுப்பைமூலை சித்திவிநாயகர் ஆலயத்தில் 16-09-2016 ல் நடைபெற்ற பூங்காவன திருவிழாவில், இலுப்பைமூலை சித்திவிநாயகர் ஆலய பூங்காவன திருவிழா சபையினருடன் இணைந்து நடத்தப்பட்டது.

அந்த நிகழ்வில் 2015ம் ஆண்டுபுலமை பரிசில் பரீடசையில் சித்தியடைந்த ஒரு மாணவர் பா.அபிநயன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்

அன்றைய நிகழ்வில் இழுப்பைமூலை சித்திவிநாயகர் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ.சி.செந்தூரசர்மா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அபிநயனுக்கு ஞாபகார்த்த பரிசாக ஒரு சைக்கிளை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட மாணவர் ,
       இளம் சாதனையாளர் செல்வன் பாலகிருஷ்ணன் அபிநயன்

" அவருக்கு பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் , பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்"

அந்த நிகழ்வின் பதிவிலிருந்து சில படங்களை கீழே காணலாம்.



Photo1



Photo2

இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த இழுப்பைமூலை சித்திவிநாயகர் தேவஸ்தான பூங்காவன திருவிழா சபையினருக்கும் , நடத்த அனுமதியளித்த இழுப்பைமூலை சித்திவிநாயகர் தேவஸ்தான நிர்வாகத்தினருக்கும், அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ.சி.செந்தூரசர்மா அவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் சிறப்புற உழைத்த அன்புள்ளங்களுக்கும் பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் அன்பான நன்றிகள்

"மீண்டும் வருவோம் ஒன்றாய் நிற்போம்"