சாதனையாளர் பாராட்டி கௌரவிப்பு - 2018

2017ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், கா.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்குமான பாராட்டி கௌரவிப்பு -2018, ஆண்டவளவு ஞானவைரவர் ஆலயத்தில் 03-07-2018 ல் நடைபெற்ற மணவாளக்கோல இரவு உற்சவத்தை தொடர்ந்து , ஆண்டவளவு ஞாவைரவர் சனசமூக நிலையத்தினருடன் இணைந்து நடத்தப்பட்டது.

அந்த நிகழ்வில் 2017ம் ஆண்டுக்குரிய 10 மாணவர்களும் 2016ம் ஆண்டில் தவறவிடப்பட்டஒரு மாணவருமாக மொத்தம் 11 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அன்றைய நிகழ்வில் ஆண்டவளவு ஞானவைரவர் ஆலய பிரதமகுரு திரு. பாஸ்கரக்குருக்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான ஞாபகார்த்த சின்னத்தையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

அன்றைய நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் விபரம்

       இளம் சாதனையாளர் கருணாகரன் கம்சிகா
       இளம் சாதனையாளர் விஜிகரன் சாதனா
       இளம் சாதனையாளர் யோகேஸ்வரன் சௌமியா
      இளம் சாதனையாளர் சாந்தகுமார் பிரகாஷன்
       இளம் சாதனையாளர் சுதர்சன் சஜின்
       இளம் சாதனையாளர் சுந்தரமூர்த்தி சுவஸ்திகன்
       சாதனையாளர் தெய்வேந்திரம் மேனகா
      சாதனையாளர் பிரபாகரன் பிரியங்கா
       சாதனையாளர் சண்முகலிங்கம் பாமதி
       சாதனையாளர் பரம்சோதி சித்சபீசன்

"இவர்கள் அனைவருக்கும் , பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் , பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் !"

அந்த நிகழ்வின் பதிவிலிருந்து சில படங்களை கீழே காணலாம்.



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1

இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த ஆண்டவளவு ஞானவைரவர் சனசமூக நிலையதினருக்கும், ஆண்டவளவு ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருக்கும், அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த ஆலய பிரதமகுரு பாஸ்கரகுருக்கள் அவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் சிறப்புற உழைத்த அன்புள்ளங்களுக்கும் பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் அன்பான நன்றிகள்.

"மீண்டும் வருவோம் ஒன்றாய் நிற்போம்"